Tuesday, July 7, 2009 / Labels:

”தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்”

முன்குறிப்பு::

இப்பதிவு என் நெஞ்சத்தில் ஓர் உயரிய இடத்தில் உள்ளவரைப் பற்றி..
தயவு செய்து இதற்கு வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம்..

கடந்த மாதம் 18ஆம் தேதி நண்பனின் நண்பர் ஒருவர் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.. அவர் என் நண்பனிடம் உதவி கேட்க, என் நண்பன் என்னிடம் என்ன செய்யலாம் உதவ முடியுமா என்று கேட்க, நான் சுறுசுறுப்பாக மற்றொரு நண்பருக்கு அலைபேசினேன்.. அவர் சிங்கையில் இருப்பவர்.. உடனே அவர் சென்னையில் இருக்கும் எங்கள் அண்ணனைத் (இவரு தானுங்க நம்ம கதாநாயகன்) தொடர்புகொள்ள அறிவுரிதினார்.. இவர் சென்னையில் இருப்பவர்.. (attendence மட்டும் தான் சென்னையில், ஆள் சென்னையில் இருப்பது அறிது.. ஹிஹிஹி)

இப்போ எல்லாருக்கும் பெயர் சூட்டுவோம்..
என் நண்பன் - SK
அவரின் நண்பர் - JE
என் சிங்கை நண்பர் - AJB
சென்னை அண்ணன் - MA

சரி வாங்க கதையை விட்ட இடத்தில் தொடருவோம்..

AJB சொன்னவுடன் அண்ணன் MAக்கு அலைபேசினேன்.. வழக்கம் போல் அண்ணன் பிசி.. சரின்னு ஒரு குறுஞ்செய்தி தட்டிவிட்டேன்.. “அண்ணே.. கொஞ்ச அவசரமான உதவி தேவை.. உங்களோட கொஞ்சம் பேசனும்”னு.. அந்த குறுசெய்தி Delivery ஆக சுமார் 45நிமிடங்களானது.. delivery ஆன அடுத்த நிமிடம் அவரிடமிருந்து அழைப்பு.. மறுநாள் நேரில் வர சொன்னார்..

மறுநாள் நாங்கள் (SK, JE & நான்) அவரிடம் சென்று எங்கள் இக்கட்டைப் பற்றி சொல்லி அவரது ஆலோசணையைப் பெற்றோம்..

அண்ணன் MA சொன்ன ஆலோசணை படி JE கொண்ட இக்கட்டு சிறுது குறைந்தது..
அது பற்றிய updates குடுக்க அண்ணன் MA க்கு 27ஆம் தேதி காலை 10மணியலவில் அழைத்தேன்..
முதல் அலைபேசி எண் Switched Off.. என்னடா இது சோதணைன்னு நினைத்துக்கொண்டு மற்றொரு எண்ணுக்கு அழைத்தேன்.. (அவர் வைத்திருந்த Caller Tune.. ”பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது” - என்ன நக்கல் இது அண்ணே??)

Caller Tuneஐ ஒரு வரி கூட கேட்கவில்லை, உடனே அதில் அண்ணனின் குரல்.. அந்த குரலில் ஒரு சந்தோஷம்.. ஒரு குதூகலம்..
ஒண்ணுமில்லை....ச்சும்மா தான் அண்ணா கூப்பிட்டேன்.. அந்த விஷயம் பற்றிய updates உங்களுக்கு சொல்ல தான் கூப்பிட்டேன்னு சொன்னேன்..

அப்போ தான் அண்ணன் சொன்னாரு.. “நான் இப்போ மெக்காவில் இருக்கிறேன். என் mobilea just 1 நிமிடம் முன்ன தான் ON செய்தேன்.. உங்க அழைப்புதான் முதல்ல வந்தது.. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு”
அண்ணன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சி தெறித்தது.. ஆனால் எனக்கு தற்மசங்கடமா போச்சி.. ”என்னடா அவரோட personal timeல நாம தொந்தரவு செய்திட்டோமோ” அப்படின்னு..
ஆனா அவரு வழக்கமான அதே உற்சாகத்தில் பேசிட்டு இருக்காரு..

நான் கேட்டேன், “என் அண்ணே, ஹஜ் யாத்திரை போவாங்களே அது வேறு மெக்கா செல்வது வேறா?”
அண்ணன் MA, ”அண்ணே, மாலை போட்டு, 40 நாள் விரதமிருந்து, 18 படி ஏறி கோவிலுக்கு போறது மாதிரி தான் ஹஜ் யாத்திரை.. அது போல் இல்லாமல், மாலை போடாமல், விரத இருக்காமல், பக்கவாட்டில் உள்ள வாயில் வழியாக கோவிலுக்கு போவோம் இல்ல, அது போல தான் நான் இப்போ மெக்கா வந்துள்ளது”

சத்தியமா சொல்கிறேன், எனக்கு அண்ணன் மேல இருந்த மரியாதை மேலும் அதிகரித்தது..
ஒரு இஸ்லாம் மதத்தவர், இந்து கோவிலுக்கு போவதை எடுத்துக்காட்டாக உபயோகித்தது..
பொதுவாக இஸ்லாம் மதத்தவர்கள் பிற வழிபாட்டுத்தளங்களுக்கு செல்வது அறிது.. அதிலும் இது போல எனக்கு புரியவைக்க அவர் உபயோகப் படுத்திய எடுத்துக்காட்டு..

முன்னமே ஒரு முறை இது போல எனக்கு புல்லரிக்க வைத்துள்ளார்..
சமீபத்தில் 7 மாசம் முன், பதிவர் சந்திப்பு நடேசன் பூங்காவில் நடந்தது.. அப்போது பேசிக்கொண்டிருந்த போது ஒரு மூத்த பதிவர் (Mr. DDR) ஒரு விஷயத்தை சொன்னார்.. (நான் மூத்த என்று சொல்வது அவரது வயதை தான்.. யாரும் இங்கே என்னுடன் சண்டைக்கு வர வேண்டாம்)

மூத்த பதிவர் DDR: நாம எல்லாம் Mr.XXX அவரது திருமணத்திற்கு சென்றிருந்த போது அருகில் இருந்த கோவிலுக்கு (இந்து கோவில்) சென்றோமே, ஞாபகம் இருக்கா?
அண்ணன் MA: நல்லா ஞாபகம் இருக்கே..
மூத்த பதிவர் DDR: கோவிலில் நான் உங்களுக்கு விபூதி குங்குமம் குடுத்தேன்.. சற்றும் தயங்காமல் உடனே வாங்கி நீங்க நெற்றியில் வைத்துக்கொண்டேர்கள்.. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது
அண்ணன் MA: சார்.. நான் விபூதி குங்குமம் வாங்குவேனா, வைச்சுக்குவேனான்னு என்பது அடுத்தது.. நான் வாங்கிகொள்வேன் என்று ஒரு நம்பிக்கையில தான் எனக்கு குடுத்தீங்க.. குடுக்கற உங்களுக்கு நான் மரியாதை குடுக்கனும் இல்ல.. அதானால தான் வாங்கி நெற்றியில் வைச்சிகிட்டேன்..

அண்ணன் மேல் மதிப்பு உண்டாக ஆரம்பித்ததே அப்போது தான்...

இப்போ சொல்லுங்க என் தலைப்பு சரி தானே???







comments (6) / Read More

Wednesday, June 10, 2009 /

கேள்வி கேட்பது சுலபம்.. பதில் சொல்லி பாருங்க.. அதோட கஷ்டம் புரியும்..

சில இழப்புக்களால் நீண்ட நாட்களாக எதையுமே எழுதாமல் இருந்த என்னை மீண்டும் எழுத நண்பர் பால்ராஜ் அடிக்கடி சொல்லுவார்.. இருந்தும் நான் எழுதவில்லை.. மனம் இல்லை என்று சொல்வது தான் சிறந்த வார்த்தையாக இருக்கும்.. மீண்டும் எழுதும் முதல் பதிவு இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ஒரு விடயத்தை வைத்திருந்தேன்..

நண்பர் பால்ராஜ், இவன இப்படியே விட்டா எழுதறதயே மறந்துவிடுவானென்று இந்த தொடர் பதிவில் என்னை இழுத்துவிட்டுட்டார்.. இந்த தொடரும் எனது மனதில் இருந்த பதிவுக்கு சிறிது ஒத்துப்போவதால்.. இங்கே..

1. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?
உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அ. செந்தில் குமார்... இது தானுங்க கவர்மெண்டுல நம்ம முகவரி.. செந்தில்/சென் - நட்பு வட்டத்தில் இந்த பெயர்.. மிகச்சமீபத்தில் நானே ஆசையா மாற்றியமைத்துக் கொண்டது.. செந்தில் குமார்.அசோக்.. அம்மா மற்றும் அப்பா ஆசையா பையானு தான் கூப்பிடுவாங்க.. அவங்க வேற எதும் சொல்லி கூப்பிடது போல எனக்கு ஞாபகமே இல்லை..
செந்தில்.. இது என் தாத்தா ஆசையா வைத்த பெயர் என்று அம்மா ஒரு முறை சொல்லி இருக்காங்க.. எங்க குடுபத்தில் எல்லாருக்கும் குமார்/குமாரி ஒட்டிக்கும்.. எனக்கும் ஒட்டிகிச்சு..

ஒவ்வொரு மனிதனுக்கும், உலகத்திலேயே அவனுக்கு இனிமையா கேட்குற சொல் அவன் பெயர் தான்.. அப்படி இருக்கும் போது, என் பெயர் எனக்கு பிடிக்காம போய்டுமா?? ரொம்ப பிடிக்கும்..
(குமாரு:: டேய்ய் உனக்கு பள்ளி பருவத்துல நண்பர்கள் வச்ச பேரு மறந்துபோச்சா??)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அவ்வப்போது..

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நம்ம கையெழுத்துக்கு நிறைய ரசிகர்களே உண்டு.. அட ஆமாங்க.. உண்மையத் தான் சொல்லறேன்.. ஆனா என்னைப் பொறுத்தவரை என் கையெழுத்து கொஞ்சம் கொஞ்சம் நல்லா இருக்கும்.. ஆனா பாருங்க பல நேரங்களில் கேவலமா இருக்கும்.. அது ஏனோ தெரியல, நம்ம கையெழுத்து always depends on the pen i use and the surface.. :-( (குமாரு:: உன் கையெழுத்த படிக்கறது எங்க தலைஎழுத்து, இதுல உனக்கு ரசிகள் இருக்காங்கன்னு ஏண்டா இப்படி பீலா விடற?)

4. பிடித்த மதிய உணவு என்ன?
காலை/மதிய உணவு.... அப்படி பிரிச்சு பாக்கறது இல்ல.. தஞ்சையில் அம்மா சமையல் சாப்பிடும் போது, அவங்களே பார்த்துக்குவாங்க.. இப்போ சென்னையில அந்த வேளை எது சாப்பிடனுமுனு தோணுதோ அத சாப்பிட்டுட்டு போய்டறது.. (ஒரு ஓட்டல் நடத்தறவன் பேசுற பேச்சா இதுன்னு குமாரு தலையில அடிச்சுக்கறான்)

பிகு: நமக்கு சாப்பாட்டுல நாட்டமில்லைன்னு மட்டும் யாரும் தப்பா நினைச்சுடாதீங்க.. அக்மார்க் தஞ்சாவூர்காரன்.. நல்லா வக்கன்னையா ரசிச்சு ருசிச்சி எல்லாத்தையும் வெட்டுவோம்ல.. அட ஒரு டம்ளர் சூட சுவையா காபி போதுங்க.. அதுக்கு ஈடு வேறு இல்லை..

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் என்ன பத்தி ரொம்ப பெருமையா நினைத்துக்கொள்ளும் ஒரு விஷயம், எனக்கு வேண்டாதவங்க, என்னை பிடிக்காதவங்க, எனக்கு பிடிக்காதவங்க என்று இதுவரை கடவுள் புண்ணியத்தில யாரும் இல்ல..
(குமாரு:: டேய் அவங்க என்னா கேட்டாங்க, நீ என்னா சொல்லற??)

6. கடலில் குழிக்க பிடிக்குமா.. அருவியில் குளிக்க பிடிக்குமா??
யாரு குளிக்கறத பற்றி கேட்கறீங்க??
ஓ நான் குளிக்கறதா?? அருவி தான் நம்ம சாய்ஸ்.. சும்மா மடமட நீர் மேல வந்து விழுமே அப்போ அடையற சுகமே தனி.. ஒன்னுமே செய்யாம அப்படியே நின்னுகிட்டு இருக்கனும்.. ம்ம்ம்ம்

கடல்.. அமைதியா மணலில் உட்கார்ந்து, ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்துட்டே இருக்கனும்..
எதையோ தொலைத்து தேடற ஒரு பரபரப்பு காட்டுமே அலைகள், அதுகிட்ட அது எதை தஒலைச்சதுன்னு கேட்டு கண்டுபிடிச்சு குடுக்கணும்..

(குமாரு:: நாட்டாம, இவன்கிட்ட கேள்விய மாட்தி கேளு.. “குளிக்க பிடிக்குமா?” அப்படி கேளு..)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவணிப்பீர்கள்??
யாரை எதுக்கு பார்கிறோம் என்பதைப் பொறுத்தது அது..
பேசும் போது பெரும்பாலும் கண்கள் தான்.. அது தான் அவங்கள பத்தி நமக்கு சொல்லும்..
(குமாரு:: அப்போ சிறும்பாலும் எத பார்த்து பேசுவ??)

8. உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன??
பிடித்தது:: எனக்கு பிடிக்காத விஷயங்களையும் பல நேரங்களில் அடுத்தவங்களுக்காக செய்யறது.. அத மகிழ்ச்சியா எடுக்கறது..
பிடிக்காதது:: ஆவ்வ்வ்வ்வ்... சோம்பலா இருக்கு.. அப்புறமா சொல்லட்டுமா??


(குமாரு:: முதல்ல மத்தவங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு கேட்டு உறுப்படற வழிய பாரு)

9. உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது??
பிடித்தது::
நீண்ட நெடிய கால்கள்..
பிடிக்காத்து:: கால் கட்டை விரல் இரண்டும் கொஞ்சம் வளைந்து இருக்கும்..
சரி பாதினா என் கால்களைத் தானே கேட்குறீங்க??


(குமாரு:: நீ உறுப்படவே மாட்ட)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்??
இதை நான் சாய்ஸ்ல விட்டுடறேன்..

11. இதை எழுதும்போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சேப்பு..

12. என்ன பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்??
அழகா கறுப்பு சட்டை போட்டு.. வெள்ளை உள்ளாடை வெளியில் தெரிய கலக்கலா இருக்கற என் கணிணி.. (வேற எத்த பார்க்கறது.. )
Mr. கந்தசாமியும் Ms. சுப்புலச்சுமியும் போடி.. போடான்னு சண்டை போட்டுகிட்டு இருக்கறத கேட்டுட்டு இருக்கேன்..

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற ஆசை?

வெள்ளை வர்ணம்..
வெள்ளை வர்ணப் பேனாவை நாம் மிக அரிதாகத் தான் பயன் படுத்துவோம்..
அப்படி நானும் ஒரு அரிதான பொருளாக ஆக ஆசை..
(என்ன ஒரு வில்லத்தனமான ஆசை - குமாரு)

14. பிடித்த மணம்?
நாம நெம்ப நேடிவிட்டியான ஆளுங்க.. நமக்கு பிடித்ததுலாம் பின்வருமாரு..
மண்வாசனை (பாரதிராசாது இல்லங்க)..
சுண்ணாம்பு செவுத்துல தண்ணீர் ஊற்றினால் வரும் சுண்ணாம்பு வாசனை..
Old Spice after shave lotion வாசனை..

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
சாரி.. நான் யாரை இதுல அழைக்கப் போவது இல்லை..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
எல்லாமே பிடிக்கும்.. சிறு சிறு கருத்து வேறுபாடுகளுடன்...

(குமாரு:: என்னடா இது இப்படி பால்ராஜ காக்கா பிடிக்கர? என்ன மேட்டர் எனக்கு தெரியாம??)

17. பிடித்த விளையாட்டு?
சாலிடர், ஸ்பைடர் சாலிடர், ஃப்ரீ செல், ரோட் ராஷ், மினி கோல்ஃப்.. இது எல்லாம் கணினியிலும், என் அலை பேசியிலும் விளையாட நெம்ப பிடிக்கும்..

(குமாரு:: என்டா டேய்?? ஏன் இப்படி??)

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்..
வெய்யுலுக்கு, இரவுக்கு என்று தனித்தனியாக இரண்டு என் அம்மனி வாங்கி தந்தது..

(குமாரு:: சரி.. சரி..)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இது தான் பிடிக்கும் ஒரு வரைமுறை கிடையாது.. மொத்தத்தில் திரைப்படம் பிடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?
முத்திரை.. நேத்து தான் பார்த்தேன்.. இன்னைக்கு Angels & Demons பார்க்கனும் என்று நினைத்துள்ளேன்..

(குமாரு:: அப்படியே நீ முடிவு செய்த மாதிரி பார்த்துட்டாலும்.. )

21.பிடித்த பருவ காலம் எது?
பருவ காலமே ஒரு வசந்த காலம் தான்..


(குமாரு:: இவன் இப்படி தான்ங்க.. நீங்க ஒன்னு கேட்டா, இவன் ஒன்னு சொல்லுவான்..)

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
உடையார்.. பாகம் 4

(குமாரு:: அதை கையில எடுத்தே பல மாசம் ஆகுதுங்க.. )

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இப்போதுமே நாம்ம டெஸ்க்டாப் அழகா கருமையா இருக்கும்..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது:: “பையா” என்று என் அப்பாவும், அம்மாவும் அழைத்தது, அழைப்பது.. “என்னப்பா” என்று என்னவள் கேட்பது.. இன்னும் நிறைய இருக்குங்க..
பிடிக்காதது:: சத்தம்.. எல்லாமே ஒரு இசை தானுங்களே.. இசை பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா?? மற்றபடி, வண்டியில போகும் போது பின்னாடி வந்து ”ஙேஙேஙேஙே” என்று அலறும் சத்தம்..

(குமாரு:: ஒரே சமையத்துல உன்னால மட்டும் தான் உணர்வாகவும், கேனத்தனமாவும் பேச முடியும் டா.. )

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அதை எப்படி கணக்கு போடுவது என்று தெரியங்க..

(குமாரு:: எதுடா? எதுன்னே சொல்லாம இப்படி ஒரு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்??)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய உண்டு..
இங்க வைரமுத்துவின் ஒரு கவிதை ஞாபகம் வருது..
“ரோஜாவோடு மல்லிகையையல்ல
ரோஜாவோடு ரோஜாவையே
ஒப்பிடாதே..
ஒவ்வொன்றுக்கும் சுயம் உண்டு”

(குமாரு:: இது ஒன்னு தான் நீ உறுப்படியா சொன்னது)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நிறைய இருக்கு... அத விடுங்க....

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோவம்..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Miles to go before I sleep..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே செந்திலாக..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
இப்போ சொல்ல தெரியலயே... கன்னாலத்து அப்பால சொல்லறேன்..

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
இன்னும் அதற்கான அனுபவம் வரலீங்க...


comments (2) / Read More

Friday, January 23, 2009 / Labels: , ,

நேதாஜி.. a tribute

சமீபத்தில் 111 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கட்டாக் நகரில் திரு ஜானகிநாத் - திருமதி பிரபாவதி தேவி தம்பதிக்கு 9 வது மகனாக (மொத்த 14 குழந்தைகள்) சுபாஷ் பிறந்தார்..

தந்தை வழக்கறிஞர்.. ஆதலால் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைத்தது.. புத்திசாலி மாணவரான சுபாஷ், 1919 ஆம் ஆண்டு பள்ளியின் முதல் மாணவராக வெளிவந்தது.. பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜில் BA (Philosophy) முடித்தது.. பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைபட்டிருப்பது எண்ணி மனம் வெதும்பியது.. பின்னர் இங்கிலாந்து சென்று சிவில் சர்வீஸ் முடித்தது அனைத்தும் வரலாறு..

தேசப்பிதா காந்தியடிகள் நிறுத்தியவர்களை எதிர்த்து இரு முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. பின்னர், காந்தியடிகளுடனான மன வருத்தம் அதிகமாகவே, காங்கிரஸிலிருந்து வெளியேறி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் துவக்கினார்..

அகிம்சையினால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைப்பது கடினம் என ஆணித்தரமாக நம்பினார்.. ஆயுத ஏந்தி பரங்கியரை எதிர்த்து போர் புரிந்தார்..

1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் ஜப்பானுக்கு வினானமார்க்கமாக செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டது..

நேதாஜியின் கடைசிப் புகைப்படம்..

நேதாஜியின் மரணத்தை அறிவித்த முதல் செய்தி..

நேதாஜியின் இறப்புச் சான்றிதழ்..

அவர் மரணமடைந்த செய்தியை ஜப்பானிய அரசு 5 நாள்களித்தே வெளியிட்டது..
அன்றைய இந்திய வைஸ்ராய் Field Marshal Archibald Wavell தனது நாட்குறிப்பில் " I wonder if the Japanese announceent of Subhash Chandra Bose's death is anair-crash is true. I suspect it very much, it is just what should be given put if he meant to go underground" என்று குறிப்பிட்டுள்ளார்..

இன்றும் அவரது மரணம் புதிராகவே உள்ளது..

வாழ்க இந்தியா !! வாழ்க நம் சுதந்திரம் !!

நன்றி:
www.google.com
www.netaji.org
www.wikipedia.org



comments (2) / Read More

Monday, January 12, 2009 /

அப்துல்லா அண்ணன் மன்னிக்க வேண்டும் !!


என் அன்னைத்தமிழ் கூறும் நல்லுலகிற்கு என் வணக்கங்கள்..
கடந்த மாதம் PITக்கு புகைப்படம் அனுப்ப நீங்கள் உதவியது போல் இந்த முறையும் நீங்கள் தான் உதவ வேண்டும்...


1. பட்ட மரத்திற்கு துணையாக ஒரு முதுபெரும் இளைஞர்..

2. எங்கே செல்லும் இந்த பாதை??

3. ஆறு அறிவின் முன் ஐந்தறிவு சரண்..

4. தியாகச் சுடர்..


மக்களே சீக்கிரமா உங்க தேர்வை சொல்லுங்க..

டிஸ்கி::
போன முறை மாதிரியே கடைசில அண்ணி சொல்லறத தான நீ அனுப்ப போற, அப்புறம் ஏன்டா எங்கள இம்சை படுத்தறன்னு குமாரு கோவிச்சுகறான்..

comments (6) / Read More

/ Labels:

சிந்தனை செய்..




வ‌ண்டிக்கு பெட்ரோல் / டீசல் நிரப்ப செல்லும் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று எத்தனை முறை கூறினாலும் நம்மவர்களுக்கு புரியாது.. 

அலைபேசியில் இருந்து வெளியேறும் கதிர்களினால் எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் அலைபேசியைப் பயன்படுத்தினால் விபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. 

அதனை பரிசோதித்துப் பார்ப்போமா..



ரு தட்டில் 4 அல்லது 5 magnetic cards எடுத்துக்கொள்ள வேண்டும்..


அலுமினியம் ஃபாயில் சிறுது எடுத்து ஒரு பந்து போல் செய்து கசக்கி.. அதில் சிறிது பெட்ரோல் தெளிக்கவும்..

தட்டிற்கு அருகில் (பாதுகாப்பான தொலைவில்)அலைபேசியினால் யாரையாவது அழையுங்கள்.. ( அழைப்பது நல்லது..)

மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தால்.. சட்டென்று தீ பற்றிக்கொள்ளும்..


நண்பர்களே தயவு செய்து அலைபேசியை பெட்ரோல் / டீசல் நிலையங்களில் பயன்படுத்தாதீர்கள்.. 

டிஸ்கி:: நம்ம குமாரு இருக்கானே.. அவன என்னான்னு சொல்லறது.. பெட்ரொல் நிலையத்துல அலைபேசியை பயன்படுத்தவே மாட்டான்.. நல்ல பையன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. 

அந்த டொமாரு ஒரு நாள்.. வண்டில பெட்ரோல் இருக்கான்னு டாங்க்கை திறந்து Made for India Nokia 1100வில் உள்ள tourch light அடித்தி பார்த்துகிட்டு இருந்தான்..



comments (3) / Read More

/ Labels: ,

அந்த லப்டப் லப்டப் நிமிடங்கள்..

நேற்று சத்தமே இல்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.. நடத்தியவர்கள்.. சென்னை ஃரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பெங்களூரு மணிபால் மருத்துவமனை மருத்துவர்கள்... 

நேற்று நடந்தவற்றை பார்க்கும் முன்..

கடந்த வியாழனன்று, பெங்களூர் மணிபால் மருத்துவமனைக்கு விபத்தில் அடிபட்ட ஒரு வாலிபர் அழைத்துவரப்பட்டிருக்கிரார்.. கேரளாவைச் சேர்ந்த அந்த 28 வயது வாலிபர் மருத்துவமனைக்கு அழைத்துவருமுன்னரே இறந்துவிட்டார்.. உறவினர்கள் அவரது இறந்தவரது உறுப்புகளை தானமாக தர முன்வந்துள்ளனர்.. அவரது கல்லீரல் ஒரு பெண்ணுக்கும் ஒரு சிறுநீரகம் ஒரு ஆணுக்கும் பொருத்தப்பட்டது..

இந்த நிலையில் தான் நேற்று காலை 7 மணியளவில் ஃரான்டியர் லைஃப்லைனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட மணிபால் மருத்துவமனை அதிகாரிகள்.. சென்னையில் எவருக்கேனும் மாற்று இருதயம் தேவைப்படுமா என்று கேட்டுள்ளனர்..

உடன் செயலில் இறங்கிய சென்னை மருத்துவர்கள்.. இதயம் தருபவரின் இரத்தம் பாசிட்டிவ் வகை என கண்டறிந்து, அதற்கு தகுந்த நபரைத் தேர்வு செய்தனர்.. சென்னையைச் சேர்ந்த 32வயது காவலருக்கு பொருத்துவது என முடிவெடுக்கப்பட்டது.. அவரை நேற்று காலை பரிசோதித்த பாது அவருக்கு அயோடிக் வால்வு நான்றாக செயல்படுவது கண்டு மகிழ்ந்து, பெங்களூரிலிருந்து வரும் இருதயத்தில் உள்ள அயோடிக் வால்வை வேறு ஒருவருக்கு பொருத்தவது என்று முடிவெடுத்தனர்..

துரிதமாக செயல்பட துவங்கினர்.. 12 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய மருத்துவர் குழு, தனியார் விமான சேவை "சஜாஸ் ஏர்சார்ட்டர்" விமானம் மூலம் 1.45 மணிக்கு பெங்களூருக்கு கிளம்பியது..

மீண்டும் பெங்களூரிலிருந்து பதப்படுத்தப்பட்ட இருதயம் பெற்றுக்கு கொண்டு 3.20 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சரியாக 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்துள்ளனர்..

இவர்கள் சென்னை வந்தடைவதற்குள் காவல்துறையின் உதவி பெறப்பட்டு இருந்தது..

சரியாக 5 மணிக்கு வந்திறங்கிய மருத்துவர் குழு, அவர்களுக்காக காத்திருந்த ஆம்புலன்ஸில் மொகப்பேர் நோக்கி விரைந்தனர்.. பத்தே பத்து நிமிடங்களில் 5.10 மணிக்கு ஃரான்டியர் லைஃப்லைன் வந்தடைந்தனர்..

அங்கே இவர்களது வருகைக்காக காத்திருந்த மருத்துவர்கள், இருதயத்தைப் பெற்றுக்கொண்டு காவலருக்கு பொருத்தினர்.. அயோடிக் வால்வு மற்றொருவருக்குப் பொருத்தப்பட்டது..


அறுவைசிகிச்சைகள் இரண்டும் வெற்றி..
இருவரும் நன்றாக உள்ளனர்..
Dr. KM Cherian முகத்தில் பெருமிதம்..

HATS OFF doctor..

comments (4) / Read More

Saturday, December 13, 2008 / Labels: ,

வரிநாய்.. நான் பார்த்தேன்.. நீங்க பார்த்து இருக்கீங்களா??

ஒரு வழியா ஒரு பெரிய குழப்பத்தில் இருந்து ஒரு மாறி மீண்டாச்சி.. (நன்றி: தங்கமணி)
இதததாங்க அனுப்பி இருக்கேன்...
நல்லாக்கீதா??



டிஸ்கி::
உங்க தங்கமணி சொல்லறததான் நீங்க கேட்கப் போறீங்க.. அப்புறம் எதுக்குடா எல்லார்கிட்டயும் தேர்வு செய்ய சொல்லி கேட்ட??? (குமார் கோபமாக கேட்கிறான்)

comments (9) / Read More