இரு தளங்கள்..

யாமறிந்த இணைய தளங்களிலே இது போல் கண்டதில்லை..

அண்மையில் சென்னை மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்த தனது இணையதளத்தில் வசதி செய்தி தந்தது நாம் அனைவரும் அறிந்ததே.(www.
tneb.in/ )

நாம் கட்டணம் செலுத்த, நாம் அந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒரு விடயம்.. என்னைப் போல் வாடகை வீட்டில் வசிப்போரும், மின் அட்டையில் உள்ள இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாதம், நான் இணையத்திலேயே கட்டணம் செலுத்திவிட்டேன்.. முன்பெல்லாம் எனது நண்பர் உதவியை நாடினேன், அல்லது அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு பல் இளிக்க வேண்டி இருக்கும்..

மின்சார வாரியத்துக்கு என் நன்றிகள்..

இப்போது நான் சொல்ல வந்த விடயம் அது அல்ல.. மின்சாரவாரிய இணையத்தில் நாம் பதிவு செய்யும் போது கேட்கப்படும் கேள்விகளில் என்னை மிகவும் கவர்ந்தது..




இது ஒரு நல்ல ஆரம்பம்.

திருநங்கைகள் இது நாள் வரை தரம்தாழ்த்தியே நடத்தப்பட்டனர். இன்றும் அது தான் நடக்கிறது.. நம் ஊடகங்களும், திரைப்படங்களும் அவர்களை ஒரு கேலிப் பொருளாகவோ அல்லது வியாபார நோக்கிலேயோ தான் பயன் படுத்திவந்துள்ளனர். பம்பாய் மற்றும் அப்பு திரைப்படங்கள் விதிவிலக்கு. தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதனை நான் பார்த்ததில்லை. ஆகவே அது பற்றி நான் கருத்து சொல்ல இயலவில்லை.

திருநங்கைகளை வீதிகளில் காணும் போது, எனக்குள் ஒருவித கலக்கம் ஏற்படும்.. அவர்கள் மனதளவில் என்ன பாடுபடுவர்?? கடைகளிலும் வணிக தலங்களிலும் சென்று காசு கேட்கும்போது, தங்கள் சுயமரியாதை விற்கப்படுவதையும், தாங்கள் ஒரு காட்சிப்பொருளாக, ஒரு அறுவருக்கத்தக்க பொருளாக பார்க்கபடுவதும் மதிக்கப்படுவதும், அவர்களை எப்படி பாதிக்கிறது?? அவர்களிடம் அது பற்றி கேட்க வேண்டும், பேச வேண்டும் என தோண்றும். ஆனால் இது நாள்வரை நான் பேசியது இல்லை என்பது ஒரு வெட்கக்கேடான விடயம்.

மின்சாரவாரியத்தின் இணையதளத்தின் மூலம், நம் தமிழக அரசு ஒரு நல்ல ஆரம்பத்திற்கு வழி காட்டியுள்ளது..
பாராட்டுக்கள் !!


அடுத்து..



அண்மையில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்..
சென்னை மாநகராட்சியின் இணையதளம் பற்றியது..

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பிறப்பு, இறப்பு சாண்றிதழ்களை தேடி print செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம், நாம் நேரில் செல்லாமல், எவருக்கும் கையூட்டு தராமல் சுலபமாக சாண்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில் நாம் புதிதாக பதிவு செய்ய முடியாது. முன்பே பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் print செய்துகொள்ளலாம்.

1950ஆம் ஆண்டு முதல் சாண்றிதழ்கள் பெறலாம். எனக்கு மிகவும் பயன்பட்டது. எனது பிறப்புச் சாண்றிதழ் தொலைந்துவிட்டது. இத்தளத்தில் நானும் ஒரு சாண்றிதழ் பெற்றுக்கொண்டேன்.

மேலும் அத்தளத்தில், பிண ஊர்தி (Mortuary Van), குளிர்சாதனப்பெட்டி (Freezer Box), கல்லரை (Burial Ground) முதலியவைகளையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

7 comments:

  1. Anonymous says

    They could have mentioned it as 'others'. I remember seing that in passport application.


    Thooya says

    நல்ல ஆரம்பம் தான்...



    மரியாதையான சொற்களை பாவிக்க வேண்டும்...அவர்களும் எம்மில் ஒருவர் தான்..


    அக்னி பார்வை says

    அதெல்லாம் சரி..யரும் இல்லாத யருக்கோ டீ ஆத்துவதுபோல்,வராத மின்சார்திற்க்கு எதுக்கைய்ய பில்லு?..

    திருநங்கைகளுக்கான மரியாதை வரவேற்பொம்


    புதுகை.அப்துல்லா says

    திருநங்கைகள் மேல் சமூகம் கொண்ட பார்வை இனியாவது மாறட்டும்


    ஸ்ரீமதி says

    Usefull information.. Thankx for sharing with us Senthil :))


    Ŝ₤Ω..™ says

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...


    Aruna says

    A nice beginning....
    anbudan aruna