"மச்சி, என்னடா இன்னும் signalலே போடல.. எப்போடா train வரும்??" முதல்ல
ஒருத்தன் இப்படி தான் ஆரம்பித்தான்..
"வரும்.. ஆனா வராது.." ஒரு குறும்பன் நகைத்தான்..
"வாங்கடா busல போகலாம்." மற்றொருவன் முன்மொழிந்தான்.
"ஆமாம்டா.. எவ்வளவு நேரம் தான் இப்படி உட்கார்ந்து இருக்கறது.. busக்கு
போகலாம் வாங்க.." இது இன்னொருவன்..
ஆனாலும், அந்த சுட்டெறிக்கும் வெயிலில், அரை கிமீ நடந்து போய் bus பிடிக்க யாருக்கும் மனசு இல்ல.. வாய் பேசியதே தவிர யாரும் இருக்கற இடத்தைவிட்டு எழுந்திரிக்க கூட இல்லை..
அது ஒரு கல்லூரி மாணவர் குழு.. பெரிய வெண்ணிலா கபடி குழு எல்லாம் இல்ல.. ஒரு group அவ்ளோதான்.. 11 நண்பர்கள்.. எப்போதும் ஒன்றாகவே சுத்தறது.. class cut அடிக்கறது, சினிமா போறது, cricket பாக்கறது.. விளயாடறது.. அப்பப்போ mid sem, end sem வந்தா படிக்கறது.. இது தான் அவர்கள் ..
கல்லூரியில் செட்டு சேர்ந்தது சிலர்.. அதற்கு முன்பே செட் ஆனது சிலர்.. இப்போ எல்லாரும் ஒரே செட்டு.. (அப்துல்லா அண்ணன் "ஆமா பெரிய சேவிங் செட்டு"ன்னு சொல்லறது காதுல விழுது..)
11 பேரில் மூவர் அருகிலுள்ள அம்மாப்பேட்டை என்னும் ஊரிலிருந்து வருபவர்கள்.. மற்றவர்கள் அனைவரும் ரயிலில் தஞ்சையிலிருந்து வருபவர்கள்.
தினமும் ரயிலில் தான் வருவார்கள்.. போவார்கள்..
சிலர் ஸீசன் டிக்கெட் எடுத்து இருந்தனர்.. சிலர் தினமும் டிக்கெட் எடுத்து வருவர்.. சிலர் எப்போது டிக்கெட் எடுக்காமல் வருவர்.. (பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டார்கள்.. அது தனி கவிதை[??!!])
அன்று அம்மாபேட்டை ராஜாக்களும் தஞ்சாவூர் நண்பர்களோடு மொக்கை போட்டுக் கொண்டிருந்தனர்.
தியாகு.. இந்த கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன்.. யார் அவன வம்பிழுத்தாலும், ஒண்ணுமே சொல்லமாட்டான்.. அவனோட மற்றொரு வகுப்பு தோழன் மணிகண்டன் வழக்கம் போல வம்பிழுத்துக்கிட்டு இருந்தான்..
மணிக்கு சொந்த ஊர் கோவை.. (nativeன்னா சொந்த ஊர் தானே?? சொந்த ஊர்ன்னு சொன்ன உடன் சொந்த காசு குடுத்து வாங்கினதான்னு கேட்ககூடாது)
மணிக்கு கோயமுத்தூர் குசும்பு கூடவே பிறந்தது.. நம்ம தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள் சாதாரனம் என்றால், நண்பர் மணி பேசினால் குறைந்தது 4/5 அர்த்தங்கள் புரிந்துகொள்ளலாம்..
தியாகு ஏதோ கேட்க, மணி அதற்கு திருவிளையாடல் தருமிக்கு சிவன் பதில் சொன்ன மாதிரி பதில் சொல்லிக்கொண்டிருந்தான்..
இந்த செட்டிலே சுவாமி சுவாமின்னு ஒருத்தன்.. எப்ப பார்த்தாலும் அவனுக்கு cricket தான். ரயிலுக்காக வெயிட் செய்யும் போதும் அங்க இருக்கற கல்லை பந்தா பாவிச்சு எறிஞ்சி விளையாடிக்கிட்டு இருப்பான்..
அவனும் தனது cricket விளையாட்டை விட்டுட்டு தியாகு - மணி சம்பாஷனையில கலந்துக்கிட்டான்..
இப்படி ஒவ்வொருத்தாரா சேர்ந்து, திருவிளையாடல் dialogue இவங்ககிட்ட சின்னா பின்னமாயிடுச்சு.. உரையாடல் களைகட்ட துவங்கியது..
இதுல 3 பேர்.. யாராவது ஒண்ணு சொன்னா, அதபிடிச்சிகிட்டு 100 செஞ்சிடுவாங்க.. (படிக்கறத தவிர..) கொஞ்சம் ஆர்வகோளாரு..
சட்டுன்னு ஒருத்தன் நோட்டில் குறிப்பெடுக்க ஆரம்பிக்க, dialogue பல கோணங்கள் எடுக்க ஆரம்பித்தது..
"இத நாம இப்படியே விட்டுட கூடாது. நாம ஒரு நாடகமா இந்த வருஷம் college functionல போட்டுடலாம்" செந்தில்..
"ஆமா, உன்னத்தான் நாடகம் போட தேடிக்கிட்டு இருக்காங்க.. போடா நீ வேற" பால்ராஜ் கோவப்பட்டான்..
"அதுனால என்ன?? நாம இத printout எடுத்து trainல ஒட்டிடுவோம்.. எல்லாரும் படிச்சி பயன்பெறட்டும்." அடுத்த கருத்தை செந்தில் எடுத்து விட.. அனைவருக்கும் அது சரி என்று படவே, மசோதா நிறைவேற்றப்பட்டது..
சுறுசுறுப்பாக குறிப்பெடுக்கும் படலம் ஆரம்பமானது..
"trainல ஒட்டினா பிரச்சினை வர போகுது. பேசாம கையில குடுத்துடுங்க" பிரபாகர், புதுசா ஒரு குண்ட தூக்கி போட்டான்.. அதுவும் சரி என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது..
மீண்டும் ஒரு கருத்து வந்து விழுந்தது.. சரவணனிடமிருந்து..
"இத ஏன் ஒரு magazineஅ நம்ப circulate பண்ணக்கூடாது??"
"superடா trainல circulate பண்ணலாம்.." பால்ராஜ் ஆர்வமானான்..
"போங்கடா நீங்களும் உங்க magazineம்.. train வந்திடுச்சி, வாங்க போகலாம்" என்று சுவாமி குரல் குடுக்க, சபை கலைந்தது..
அம்மாப்பேட்டை நண்பர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, அனைவரும் ரயிலுக்கு சென்றனர்..
இந்த மூன்று ஆர்வகோளாரு பசங்களும் ரயிலில் போகும்போதும் நிறுத்தவில்லை..
"மச்சி, நாம இத விடக்கூடாது. கண்டிப்பா magazine... பொடறோம்."
"ஆமம்டா.. "
ரயில் தஞ்சையை சென்றடைய 20 நிமிடங்களாகும்.
ரயில் தஞ்சையை அடைந்தபோது செந்தில், சரவணன், பால்ராஜ் மூவரும் ஒரு வார இதழுக்கு ஆசிரியர் ஆகி இருந்தனர்..
மூவரும் தங்கள் பெயரில் உள்ள எழுத்தகளை வத்து magazineக்கு ஒரு பெயர் வைத்துவிட்டனர்.. "SenSarPal Weekly"
அவர்கள் மூவருக்கும் "ஆனந்த விகடன்" மேல் ஒரு ஈற்பு.. அப்பொதெல்லாம் தஞ்சையில் ஆனந்த விகடன் புதன்கிழமை வெளிவரும்.. இவர்களும் தங்களது வார இதழ் புதன்கிழமை தோறும் வெளியிடுவது என்று முடிவெடுத்தனர்.
அடுத்துவந்த இரு நாட்கள் துரிதமாக கடந்து சென்றது..
31/12/1997 "SenSarPal Weekly" தஞ்சை திருவாரூர் ரயிலில் முதன்முறையாக விநியோகிக்கப்பட்டது.. அனைவருக்கும் இலவசமாகவே தரப்பட்டது..
முதலில் கையில் எழுதி xerox... எடுத்து விநியோகம் செய்யப்பட்ட "SenSarPal Weekly" பின்னர் NIITயின் உதவியுடன் print செய்யப்பட்டு xerox எடுத்து விநியோகிக்கும் அளவு உயர்ந்தது..
அருகில் இருக்கும் அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தர ஆரம்பித்தனர்.. (அங்க படிக்கிற பெண்கள் தானே இவர்களது target...)
இரண்டு வருடங்கள் வாரம்தோறும் வெளிவந்த "SenSarPal Weekly", அந்த மூவருக்கும் ஒரு தளமாக அமைந்தது..
இன்று அவர்கள் வெவ்வேறு திசையில் வெவ்வேறு துறைகளில் ஜொலித்துக்கொண்டிருக்கிறனர்...
(ஆங்கில அகர வரிசைப்படி..)
சார்லஸ்.. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் (அன்று நீ ஆசிரியருக்கு தந்த தொந்தரவுகள் இன்று உனக்கே repeata????)
கோகுல்.. கணினி துறையில் வல்லுனர்.. (வல்லுனர் தானே???)
பால்ராஜ்.. கணினியில் SAP... ஜாம்பவான்.. (ASPயிலிருந்து SAPக்கு jump ஆனதினாலால ஜம்ப்வான்னு சொல்ல முடியாது இல்லயா?)
பிரபாகர்.. மென்பொருள் வல்லுனர்..
ரஞ்சித்.. ரொம்ப நல்லவர்.. வல்லவர்.. படிப்பாளி.. சொன்னதைச் செய்தவர்.. இன்று ஃபிரான்சில்Post Doctorate Fellowship... (correcta?) செய்துகொண்டிருக்கிறார்..
சரவணன்.. கணிப்பொறி marketing துறையில்
Sriராம்.. மென்பொருள் வல்லுனர்..
சுவாமி.. மென்பொருள் வல்லுனர்..
தம்பி.. மென்பொருள் வல்லுனர்..
தியாகு.. கணிப்பொறி வல்லுனர்..
செந்தில்... மனிதவளத் துறையில் பொட்டி தட்டிக்கொண்டு, ஒரு சிறிய உணவகமும் நடத்திக்கொண்டு இருக்கிறான்..
ஆமாங்க.. இது எங்க கதை தான்.. நானும் எழுத்தாளன் ஆன கதை..
அன்று அவர்கள் குடுத்த ஊக்கம் தான் இன்று பால்ராஜும், சரவணனும், நானும் ஒரு பெரிய எழுத்தாளர் ஆவர்தற்கு விதை..
நீ எப்போ எழுத்தாளன் ஆனேன்னு சண்டைக்கு வராதீங்க..
பதிவுலகம் என் தோழி மஹிமா மூலம் 1996ல் அறிமுகம் ஆனது..
நான் முதலில் படித்தது விசித்ரா மாணிக்கம் அவர்களுடையது.. அது என்னை வெகுவாக கவரவே நானும் எழுத ஆரம்பித்தேன்..
எனது எண்னங்களுக்கு ஒரு வடிகாலாக பதிவுகள் அமைந்தது..
மொக்கைகள் இருக்கக் கூடாது என்பதில் நான் கண்டிப்புடன் இருந்தேன்..
பின்னர் என்க்கும் பதிவு போதை வந்தது என்பது வேறு கதை..
என்றும் எனக்கு தூண்டுகோலாக இருக்கும் என் நண்பன் நாகராஜன் எனது எழுத்துக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்.. (நீ எப்போடா எழுத போற??)
நண்பர் பால்ராஜ்க்கும் எனக்கும் இப்போதெல்லாம் பதிவுகளில் தான் சண்டையே..
நாங்கள் Prof. என்று பெருமையுடன் அழைக்கும் ரஞ்சித் எழுதும் பதிவுகள் பல என் சிறிய மூளைக்கு எட்டுவதில்லை.. (all are going well over my head)
அவ்வப்போது எனது பதிவுகளைப் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அபர்னா..
பதிவுகளின் மூலம் அறிமுகமான, அதிஷா, சகா கார்க்கி, பாலச்சந்தர், விநோத், டோன்டு ராகவன், தாமிரா, Sriமதி, அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும் தூயா மற்றும் என்னைத் தம்பியாக பாவிக்கும் அண்ணன் அப்துல்லா...
பதிவுகள் குறித்து அவ்வப்போது என்னுடன் சண்டையிடும் நண்பர் ரமேஷ்..
என்றும் எப்போது மௌனமாக இருக்கும் என் வருங்கால தங்கமணி..
not to forget my friend Vaishav.. who always gives constructive criticisms..
50வது பதிவு எழுதும் இத்தருனத்தில் எல்லாருக்கும் எனது கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
நன்றி!!
நன்றி!!
நன்றி!!
18 comments:
நண்பர் மணிகண்டன் என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன்.. அவர் மணிவண்ணன்.... ஞாபகப்படுத்திய பால்ராஜ்ஜுக்கு நன்றி.. ஹிஹி
ஐம்பதுக்கு என் இனிய வாழ்த்துக்கள். நான் தான் முதல்ல வாழ்த்துறேன்.
@ ஜோசப் பால்ராஜ்
thanks da machi...
இனிய மலரும் நினைவுகள், அந்த பூண்டி கல்லூரி காலம் 3 வருச கால வாழ்க்கையும், ரயில் பயணங்கள், பேருந்து பயணங்கள் ( அதுல பூண்டியில இருந்து தஞ்சாவூர் போறதுக்கு நீடாமங்கலம் வரைக்கும் போயிட்டு வர்றது உட்பட) எல்லாம் நினைவுக்கு வந்துருச்சு.
குபுக்னு, குபீர்னு இப்டி நம்ம மணிவண்ணண் சொல்ற சில ட்ரேட் மார்க் வார்த்தைகள் எல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு.
//பால்ராஜ்.. கணினியில் SAP... ஜாம்பவான்.. (ASPயிலிருந்து SAPக்கு jump ஆனதினாலால ஜம்ப்வான்னு சொல்ல முடியாது இல்லயா?)//
டேய், நான் ஜாம்பவான் எல்லாம் இல்லை. என்னைவிட திறமையானவங்க, நல்ல வேலையில இருக்கவங்க எல்லாம் நம்ம குழுவுல இருக்காங்க.
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் செந்தில்.
சென்சார்பால் பற்றிக் குறிப்பிடும்போது அஞ்சலைஅம்மாள் பொறியியல் கல்லூரி மாணவிகளைப் பற்றியும் குறிப்பிட்ட உங்கள் நேர்மையைப் பாராட்டியே ஆகவேண்டும்.. :)
நினைவுகளை அசைபோடுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.
நன்றி Prof. sir..
உண்மை பேசுவது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. (டிஸ்கி: எனக்கு அல்வா பிடிக்காது)... ஹிஹிஹி
4 பேரு சந்தொஷப்பட வைக்கறது தான நமக்கு சந்தோஷம்.. என்றுமே இளம்பருவத்தில் நாம் செய்தவற்றை நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமா இருக்கும்..
அதான் உங்க ஊட எல்லாம் பகிர்ந்துக்கறேன்..
சென்,
அருமையான பதிவு.
நீங்க பெரிய எழுத்தாளர் தான்...ஒத்துக்க வேண்டும்..பின்ன இதற்கு ஒரு ரயில் கதையே வைச்சிருக்கிங்களே..:) கிகிகி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா :)
அப்படியே 50 ஆவது பதிவிற்கும் வாழ்த்துகள் :)
வாவ் அண்ணா பதிவுல நானுமா?? :)) நல்லவேள இந்த முறை தொடர் பதிவு இல்ல ஹி ஹி ஹி... இனிமே அப்படி தொடர் பதிவுனாலும் என் கைல தரமாட்டீங்க அது வேற விஷயம்.. ;)) அப்பறம் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் அண்ணா.. :))
வாம்மா ஸ்ரீமதி..
நானே ஒரு தொடர் பதிவு துவக்கி வைக்கலாம்ன்னு இருக்கேன்.. அதுல முதல் கொக்கி உனக்கு தான்.
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ..
தம்பி 50 வது பதிவுக்கு வாழ்த்துகள்
சீக்கிரம் நைன்ட்டி ச்சீய்..ச்சீய் 100 அடிப்பா :)
என்றும் எப்போது மௌனமாக இருக்கும் என் வருங்கால தங்கமணி..
//
ஏம்ப்பா இன்னும் யாருன்னு தெரியலங்கிறத இந்த மாதிரி டீசன்டா சொல்லுறியா?? :))))))))
நன்றி அண்ணா..
எப்படி இந்தப் பதிவ மிஸ் பண்னேனு தெரியல சகா. மன்னிச்சுக்கோங்க..
50 இனி 500 ஆகனும் வாழ்த்துறேன். அளவா எழுதினாலும் அழகா எழுதறீங்க.. வாழ்த்துகள் சகா.. எனக்கும் ட்ரெய்ன பார்த்தா பல ஞாபகம் வரும்..
@கார்க்கி..
நன்றி சகா..
ட்ரெய்ன் எல்லாருக்கும் ஒரு கதையை ஞாபகப்படுத்தும்..
Post a Comment