Wednesday, November 19, 2008

நன்றி!! மன்னிப்பு!!

நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளில் நன்றியும் மன்னிப்பும் மிக முக்கியமானது..

வள்ளுவர் கூட
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

என்று கூறி உள்ளார்..

ஆனால் இன்று நாம் கேட்கும் மன்னிப்பும் கூறும் நன்றிக்கும் அர்த்தம் தெரிந்து தான் அவ்வார்த்தைகளைப் பயன்ப்டுத்துகிறோமா??

நன்றி என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும்..
மன்னிப்பு கேட்கும் போது கண்களைப் பார்த்து கேட்க வேண்டும்..

இவை இரண்டுமே இன்றைய வாழ்வில் நிகழ்வதில்லை.. நன்றி சொல்வது கடமையாக்கப்பட்டுவிட்டது.. மன்னிப்பு கேட்பது மற்றொரு வார்த்தையாகிவிட்டது..

மன்னிப்பு கேட்பர் தான் வருந்திய அச்செயலைனை மீண்டும் செய்யக் கூடாது.. ஆனால்.. மன்னிப்பு என்பது வெறும் வார்த்தையான இன்றைய சமூகத்தில் அதே தவறுகள் மீண்டும் மீண்டும் நடத்தப்படுகிறது..

சரி..
நன்றி & மன்னிப்பு கேட்பதும் இடத்திற்கு இடம் பொருள் வேறுபடுகிறது..

மேலதிகாரியிடம் ஒருவர் கேட்கும் மன்னிப்பும்.. வெறும் பாசாங்கு வார்த்தை.. அவரிடம் கூறும் நன்றி.. நான் இதைச் செய்ய கூடியவன், இது வரை நீ தான் என்னை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், அடுத்து கேட்கவிருக்கும் சம்பள / பதவி உயர்விற்கு அடிபோடுவதுமாக இருக்கிறது..

ஊடலில் இருக்கும் காதலன்/ காதலி மற்றவரிடம் கூறும் நன்றி & மன்னிப்பு.. அவரைத் திட்டுகிறார் என்ற பொருளைத் தருகிறது.

வேண்டாவெறுப்பாக கேட்கப்படும் மன்னிப்பும் கூறப்படும் நன்றிகளும் அதற்குரிய மரியாதையை இழக்கிறது.. மேலும் அவர்களை கேவலப்படுத்தும் செயலாகவும் இவ்விரு வார்த்தைகளும் பயன்படுகிறது..

பெற்றோரிடம் நாம் நன்றி என்ற ஒற்றை வார்த்தையினால் முடித்துக்கொள்ள முடியாது.. அவர்களது செயல்களுக்கு காலாகாலமும் நாம் கடமைப் பட்டு இருக்க வேண்டுமே ஒழிய நன்றி என்ற வார்த்தையால் அவர்களை ஒதிக்கிவிடக் கூடாது.

நண்பர்களிடம் நன்றி & மன்னிப்பு தேவையற்றது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூருவார்.
அவரிடம் ஒரு முறை நான் நன்றி கூறியதும், மன்னிப்பு கேட்டதும் பெரும் தவறாக போய் அடுத்த சண்டைக்கு வழிவகுத்தது..
ஆனால் என்னைப் பொருத்தவரை.. நண்பரிடமும் நன்றியும் மன்னிப்பும் தேவை.. அவை வெறும் வார்த்தைகளாக இல்லாதவரை..

இன்னொரு நண்பர்.. தன் தந்தை தாயிடமும் நன்றி சொல்லுவார்... நண்பருக்குள்ளயே நன்றி வேண்டாம் என்ற கருத்து இருக்கும் போது, இவர் இப்படி.. ஏன் இப்படி என்னிடமே formalஆ பேசறன்னு அவரது அப்பா கேட்டதற்கு, “எந்த ஒரு நல்ல பழக்கமும் வீட்டில் தான் பழக முடியும்.. உங்ககிட்ட நான் thanks சொல்லறது தான் பின்னாடி அடுத்தர் கிட்ட சொல்ல practiceஆ இருக்கும்”ன்னு சொன்னாரு..
ஏங்க.. நீங்க practice பண்ணறதுக்கு உங்க அப்பா அம்மா உணர்வுகள் தான் கிடைச்சதா???

என்னமோங்க..
நன்றிகளும் மன்னிப்புகளும் வெறும் வார்த்தைகளாக பயபடுத்தாமல் உள்மனதில் இருந்து அதன் அர்த்தத்தையும் அவசியத்தையும் புரிந்து பயன்படுத்தினால் உறவுகள் இன்னும் வலுப்பரும்..

டிஸ்கி::
சிலருக்கு மன்னிப்ப்பூபூபூ தமிழயே பிடிக்காத வார்த்தையா இருக்கு.. ம்ம்ம் என்ன செய்யறது??

12 comments:

ஜோசப் பால்ராஜ் said...

நான் ஏன் எங்கிட்ட நன்றியும், மன்னிப்பும் சொல்ல வேண்டாம்னு சொல்றேன் தெரியுமா?

மனசுல நன்றி உணர்வோ, மன்னிப்புக் கேட்கிற உணர்வோ இல்லாம வெறும் வார்த்தைக்கு அதை சொல்றதுனால எந்த உபயோகமும் இல்ல.

அப்படி மனசால நினைச்சுட்டா அதை சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. ( மனசால உணர்ந்துட்டா அதை செயல்ல தானா நன்றி உணர்வும், மன்னிப்பு வேண்டுவதும் வந்துடும், அப்பறம் அங்க அந்த வார்த்தைகளுக்கு என்ன வேலை?)

Akila said...

I agree with you... மன்னிப்பும், நன்றியும் தேவையான இடத்தில் அவசியம் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்.. But it has become usual to repeat the same mistake even after asking sorry once... Thanks can be used unless and untill it doesn't hurt the person who receives it..

அதிஷா said...

யோவ் இப்ப இன்னான்ற....

கோவி.கண்ணன் said...

மிக நல்ல பதிவு. நானும் நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம் நன்றி சொல்லத் தேவை இல்லை என்று நினைத்து இருந்தேன். ஆனால் உளவியல் ரீதியாக நன்றி என்ற சொல் நல்ல புரிதலைத் தருகிறது என்பதை சிங்கை வந்ததும் உணர்ந்து கொண்டேன். கணவன் - மனைவிக்கு இடையே ஊடல்கள் ஏற்படாமல் இருக்க 'நன்றிகள்' பயன்படுத்தப்பட வேண்டும். அதை கோடிட்டு முன்பு ஒரு சிறுகதை கூட எழுதி இருக்கிறேன்

Anonymous said...

saying the right expressions at the right time with the right feeling and with honest realization is the most wanted..its easy to say thanks.. but not easy to say "sorry" for our ego stands before us and zip our mind..to accept our follies

Ŝ₤Ω..™ said...

@ பால்ராஜ்..
நண்பா நான் சொல்லறதும் அதே தான்..
***வேண்டாவெறுப்பாக கேட்கப்படும் மன்னிப்பும் கூறப்படும் நன்றிகளும் அதற்குரிய மரியாதையை இழக்கிறது.. மேலும் அவர்களை கேவலப்படுத்தும் செயலாகவும் இவ்விரு வார்த்தைகளும் பயன்படுகிறது..
***

Ŝ₤Ω..™ said...

@ Akila..

i too agree with your first point..
but.. "Thanks" is being used to hurt the other person, rather using "thanks" and hurting them unknowingly..

Ŝ₤Ω..™ said...

@ அதிஷா..

தல.. நேற்று நடந்த நம் வலையுரையாடலுக்கும் இந்த பதிவுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை..

Ŝ₤Ω..™ said...

@ கோவி...

கருத்துக்கும் கதைக்கும் நன்றி..
நன்றி சொல்வது உள்வியல் ரீதியாக ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது.. மேலும், மீண்டும் மீண்டும் உதவுவதற்கும் அது போல பிறர்க்கு உதவுவதற்கும் அது உந்துடலாக இருக்கிறது..

Ŝ₤Ω..™ said...

@ anonymous..
thanks for ur comment..

ஸ்ரீமதி said...

நன்றி அண்ணா... :)) மன்னிச்சிடுங்க...:((

Ŝ₤Ω..™ said...

@ ஸ்ரீ..

எதுக்கு நன்றி???
என்ன செய்தாய் நான் உன்னை மன்னிபதற்கு??

Related Posts with Thumbnails