சிந்தனை செய்..




வ‌ண்டிக்கு பெட்ரோல் / டீசல் நிரப்ப செல்லும் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று எத்தனை முறை கூறினாலும் நம்மவர்களுக்கு புரியாது.. 

அலைபேசியில் இருந்து வெளியேறும் கதிர்களினால் எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் அலைபேசியைப் பயன்படுத்தினால் விபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. 

அதனை பரிசோதித்துப் பார்ப்போமா..



ரு தட்டில் 4 அல்லது 5 magnetic cards எடுத்துக்கொள்ள வேண்டும்..


அலுமினியம் ஃபாயில் சிறுது எடுத்து ஒரு பந்து போல் செய்து கசக்கி.. அதில் சிறிது பெட்ரோல் தெளிக்கவும்..

தட்டிற்கு அருகில் (பாதுகாப்பான தொலைவில்)அலைபேசியினால் யாரையாவது அழையுங்கள்.. ( அழைப்பது நல்லது..)

மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தால்.. சட்டென்று தீ பற்றிக்கொள்ளும்..


நண்பர்களே தயவு செய்து அலைபேசியை பெட்ரோல் / டீசல் நிலையங்களில் பயன்படுத்தாதீர்கள்.. 

டிஸ்கி:: நம்ம குமாரு இருக்கானே.. அவன என்னான்னு சொல்லறது.. பெட்ரொல் நிலையத்துல அலைபேசியை பயன்படுத்தவே மாட்டான்.. நல்ல பையன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. 

அந்த டொமாரு ஒரு நாள்.. வண்டில பெட்ரோல் இருக்கான்னு டாங்க்கை திறந்து Made for India Nokia 1100வில் உள்ள tourch light அடித்தி பார்த்துகிட்டு இருந்தான்..



3 comments:

  1. Thooya says

    ரொம்ப பேருக்கு இது புரிவதேயில்லை..


    ஜோசப் பால்ராஜ் says

    ஒரு சர்தார்ஜி, வண்டிக்கு பெட்ரோல் போட போயிருக்காரு. அந்த பங்க்ல இங்கு செல்போன் உபயோகிக்காதீர்கள்னு அறிவிப்பு இருந்துச்சாம். உடனே நம்ம சர்தார் என்ன செஞ்சாரு தெரியுமா?
    தன் செல்போன எடுத்து, அதுல போன் புக்ல இருக்க எல்லாருக்கும் ஒருத்தர் ஒருத்தருக்கா போன் பண்ணி, நான் இப்ப பெட்ரோல் பங்க்ல இருக்கேன், அதுனால ஒரு பத்து நிமிஷத்துக்கு எனக்கு போன் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு அப்றம் வண்டிக்கு பெட்ரோல் போடச் சொன்னாராம். அது மாதிரி செய்யலாமா சார்?


    நர்மதா சிவா says

    நான் அலைபேசி பாவிப்பதில்லை. இருந்த போதும் இப்படி ஒரு அபாயம் இருக்கின்றது என்று தெரியாது. தகவலுக்கு நன்றிகள். படத்துடன் கூடிய விளக்கம் அருமை.